உலகம்

இரண்டாவது பூமியை கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்: மனிதர்கள் வாழ்கிறார்களா?

Published

on

பூமியை அடுத்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது நாசா விஞ்ஞானிகள் பூமியை போன்ற இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்க வாய்ப்பு இருப்பதால் அதில் ஏற்கனவே மனிதர்கள் வாழவோ அல்லது இனிமேல் மனிதர்கள் வாழவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நாசா கண்டுபிடித்த கிரகம் பூமி அளவிலான வடிவமைப்பில் இருப்பதாகவும், மனிதர்கள் வாழக்கூடிய அளவில் இருப்பதாகவும், திரவ நீர் மேற்பரப்பில் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

நாசாவின் டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே சாட்டிலைட்டின் டேட்டா தகவலின்படி இந்த கிரகம் TOI 700 e என அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதாகவும், 95% நீர் மற்றும் பாறைகள் நிறைந்ததாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

இதே அமைப்பில் TOI 700 b, c மற்றும் d என அழைக்கப்படும் மூன்று கிரகங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய கூடுதலாக ஒரு வருடம் தேவைப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் முதுகலை பட்டதாரியான எமிலி கில்பர்ட் கூறியபோது, ‘எங்களுக்குத் தெரிந்த பல சிறிய, வாழக்கூடிய-மண்டலக் கோள்களைக் கொண்ட கிரகங்களில் இதுவும் ஒன்றாகும். இது TOI 700 அமைப்பை கொண்டது’ என்றார்.

TOI 700 என்பது ஒரு சிறிய, குளிர்ந்த நட்சத்திரம் என்றும், இது டோராடோவின் தெற்கு விண்மீன் தொகுப்பில் 100 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்றும், 2020 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் சிலர் இந்த கிரகத்தை கண்டுபிடித்தாலும் தற்போது தான் கூடுதல் தகவல் கிடைத்துள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version