விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் நடக்கும் டோக்கியோ இரவில் எப்படி மின்னுகிறது தெரியுமா..?- நாசா வெளியிட்ட வைரல் போட்டோ

Published

on

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில், கடந்த 23 ஆம் தேதி ஆரம்பித்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும். தினம் தினம் உலகின் மிகச் சிறந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் தங்கள் திறமையைக் காட்டி பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

டோக்கியோவில் காலையில் தொடங்கும் போட்டிகள் இரவுவும் தொடருகின்றன. அப்படி தொடருவதால் டோக்கியோ நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. அப்படி டோக்கியோ நகரம் மினுமினுக்கும் காட்சியை ஆகாயத்தில், உலகுக்கு வெளியில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்.

அப்படியொரு புகைப்படத்தைத் தான் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டு அசத்தியுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரம் மட்டும் வண்ண மய விளக்குகளின் வெளிச்சத்தால் பளீரென்று காணப்படுவதும், அதைச் சுற்றிய ஜப்பானின் மற்ற இடங்களில் அவ்வளவு வெளிச்சம் இல்லை என்பதும் தெரிகிறது.

பிரமிப்பையும் வியப்பையும் ஏற்படுத்தும் இந்தப் படம் ஒரு ஒலிம்பிக் போட்டி நடத்த எத்தகைய உள் கட்டுமானம் தேவை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இதுவரை ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் இந்தியாவுக்கு ஒரேயொரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version