உலகம்

நாசாவின் தலைவிதியை தீர்மானிக்கும் அந்த 6.30 நிமிடம்.. செவ்வாயை நெருங்கிய இன்சைட்!

Published

on

நியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பி இருக்கும் இன்சைட் ரோபோட் செவ்வாயில் தரையிறங்க 6.30 நிமிடங்கள் ஆகும் கூறப்பட்டுள்ளது.

”உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்” என்று அமர்க்களம் அஜித் போலத்தான் தற்போது நாசா பாடிக்கொண்டு இருக்கிறது. இப்போது நாசாவின் மொத்த உயிரும் செவ்வாய் கிரகத்தில்தான் உள்ளது.

நாசா செவ்வாய்க்கு அனுப்பிய இன்சைட் ரோபோட் இன்று நள்ளிரவில் அங்கு தரையிறங்க உள்ளது. இன்று இரவு தரையிறங்கும் அந்த ரோபோட், மிக முக்கியமான 6 நிமிடங்களை கடக்க வேண்டி இருக்கிறது.

இந்த இன்சைட் தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து 10 மணி நேர தொலைவில் இருக்கிறது. இந்த நேரத்தை அதிகரிக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செவ்வாயில் இன்சைட் ரோபோவை இறக்க கூடுதலாக இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். ஆனால் இன்று நள்ளிரவிற்குள் கண்டிப்பாக இன்சைட் செவ்வாயில் இறக்கப்படும்.

செவ்வாயின் வடக்கு பகுதியில்தான் இந்த ரோபோட் களமிறங்க உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நாசா ஏற்கனவே அனுப்பி இருக்கும் க்யூரியாசிட்டி ரோவருக்கு இது பங்காளி போல கொஞ்சம் தொலைவில் தனியாக நின்று ஆராய்ச்சி செய்யும். இது செவ்வாயில் இறக்கப்படும் பகுதியின் பெயர் எல்சியம் பிலானிசியா.

 

seithichurul

Trending

Exit mobile version