உலகம்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் விண்கலம்: இந்திய பெண் விஞ்ஞானிக்கு குவியும் பாராட்டு

Published

on

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நாசா பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்தியாவை சேர்ந்த சுவாதி மோகன் என்பவரது தலைமையிலான நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய இந்த விண்கலம் ஒரு டன் எடை கொண்டது என்பதும் 2 மீட்டர் நீளம் மற்றும் இரண்டு ரோபோ கைகளுடன் 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 3.55 மணிக்கு பெர்சவரன்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. இதனை அடுத்து விஞ்ஞானிகள் இதனை ஆரவாரமாக கொண்டாடினர். அதுமட்டுமின்றி செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தையும் பெர்சிவரன்ஸ் அனுப்பி உள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது நாசாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது

இந்த விண்கலம் 2030ஆம் ஆண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை செவ்வாய் கிரகத்திலிருந்து ஆய்வு செய்யும் இந்த விண்கலம் பலவிதமான புகைப்படங்களையும் ஆய்வுகளையும் அனுப்பும் என்றும் கூறப்படுகிறது.

Also Read: நாசாவின் திட்டத்திற்கு தலைமை தங்கிய இந்திய வம்சாவளி பெண்.. சாதனை படைத்த ஸ்வாதி மோகன்

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக விண்கலம் தரையிறங்கியதை அடுத்து இந்திய விஞ்ஞானி சுவாதி மோகன் உள்பட நாசா விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

seithichurul

Trending

Exit mobile version