சினிமா
உன் கையை புடிச்சு 100 முத்தம் கொடுக்கணும்! – ரஞ்சித்தை பாராட்டி தள்ளிய நாசர்…
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டது. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக ரஞ்சித்தின் இயக்கம், நடிகர்கள் தேர்வு, திரைக்கதை, எடுத்துக்கொண்ட கதைக்களம் என அனைத்தையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கபிலனா நடித்துள்ள ஆர்யா, ரங்கன் வாத்தியாராக நடித்துள்ள பசுபதி மற்றும் ஜான் விஜய் கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்கள் நினைவை விட்டு நீங்கவில்லை.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகரும், இயக்குனருமான நாசர் ரஞ்சித்தை பாராட்டி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ‘தம்பி ரஞ்சித். உன்னை நான் பாராட்டமாட்டேன். உன் கையைப்பிடித்து ஒரு நூறு முத்தம் கொடுத்து நன்றி என ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் என் சமூகத்துக்கு கொடுத்ததற்காக’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.