சினிமா
நான்காவது திருமணம்.. நச்சுன்னு லிப்லாக்.. அப்படியே கவிதை மாதிரி இருக்குல்ல; நரேஷ் செய்த சம்பவம்!
பிரபல தெலுங்கு நடிகரான நரேஷ் கன்னட நடிகை பவித்ரா லோகேஷை நான்காவதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக புத்தாண்டில் அறிவித்து நச்சென லிப் லாக் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சிங்கிள்களையும் ரொம்பவே ஷாக் ஆக்கி உள்ளது.
நெஞ்சத்தை அள்ளித்தா, பொருத்தம், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் நடிகர் நரேஷ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
16 வயதில் கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமான பவித்ரா லோகேஷ் இந்த ஆண்டு வெளியான ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருப்பார்.
மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படத்திலும் மகேஷ் பாபுவோட அம்மாவாக இவர் தான் நடித்திருப்பார். விஷாலின் அயோக்யா உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ள பவித்ரா லோகேஷ் நடிகர் நரேஷை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து லிப் லாக் அடித்துள்ள படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
தெலுங்கு நடிகர் நரேஷ் மற்றும் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் கடந்த சில மாதங்களாகவே ரகசிய உறவில் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹோட்டல் ரூமில் இருந்த போது நடிகர் நரேஷின் மனைவி ரம்யா ரகுபதி, ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்து மீடியாக்கள் முன் நிறுத்தி செருப்பால் அடித்து அசிங்கப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து ரம்யாவை நரேஷ் விவாகரத்து செய்து விட்டு நான்காவதாக பவித்ராவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். ரம்யாவுக்கு முன்னதாகவே இரு மனைவிகளை அவர் திருமணம் செய்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சினிமா செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.