தமிழ்நாடு

நாராயணசாமி போட்டியில்லை: காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு!

Published

on

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக புதுவையில் முதல்வராக இருந்த நாராயணசாமி வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

புதுவையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் 14 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பெயர் இல்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் இன்னும் ஒரு தொகுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டியது இருப்பதால் அதில் நாராயணசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிட மாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து நாராயணசாமி வரும் தேர்தலில் போட்டி இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் புதுவையில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version