தமிழ்நாடு

புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியா? பாஜக ஆட்சியா? முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி!

Published

on

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி நடக்கிறதா? அல்லது பாஜக ஆட்சி நடக்கிறதா? என முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் ரங்கசாமி அவர்கள் ஜூலை 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என்று அறிவித்தார். முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பின்னர் படிப்படியாக பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் முதல்வர் அறிவித்த இரண்டே நாட்களில் பாஜகவை சேர்ந்த கல்வி அமைச்சர் நமசிவாயம் புதுச்சேரியில் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை என்றும், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பள்ளி திறக்கவில்லை என்றும் பள்ளி திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் பள்ளிகள் திறக்கும் என்றும் கல்வியமைச்சர் பள்ளிகள் திறக்காது என்றும் மாறி மாறி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி இதுகுறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி, ஆனால் பாஜக அமைச்சர் இப்போது இல்லை என அறிவிக்கிறார். புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி நடக்கிறதா? இல்லை பாஜகவின் ஆட்சி நடக்கிறதா? என்று முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு ஆளும் தரபினர் என்ன பதில் சொல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version