இந்தியா

தினமும் 6.20 மணிக்கு அலுவலகம் சென்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி.. அதனால் இழந்தது என்ன?

Published

on

இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி தினமும் 6.20 மணிக்கு ஓய்வு பெறும் வரை அலுவலகத்திற்கு சென்றதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில் அதனால் தான் இழந்தது என்ன என்பதையும் அவர் வரிசைப்படுத்தி உள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம் கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பதும் நாராயணமூர்த்தி தனது மனைவியிடம் ரூ.10,000 கடன் பெற்று அந்த நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் இன்று கடந்த 40 ஆண்டுகளில் 80 பில்லியன் டாலர் மூலதனத்தைக் கொண்ட ஒரு நிறுவனமாக விளங்கி வருகிறது என்பதும் இதில் தற்போது 3.35 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அளவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்ததற்கு நாராயணமூர்த்தியின் மிகப்பெரிய உழைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியில் நேரம் குறித்து அவர் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரியான நேரத்தில் அலுவலகம் சென்று மணிக்கணக்கில் உழைப்பது தான் என்னுடைய தினசரி நடைமுறையாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். தினசரி காலை 6 மணிக்கு தனது அலுவலகத்தை அவர் அடைவார் என்றும், தன்னைப் பின்பற்றி தன்னிடம் வேலை பார்ப்பவர்களும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்போஸிஸ் நிறுவனத்தை மிகப்பெரிய நிறுவனமாக தனது உழைப்பு ஒரு பக்கம் காரணம் என்றாலும் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்யாமல் இருந்தது தன்னுடைய தியாகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மனைவி சுதா தனது இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்க்கும் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் என்றும் இரண்டு மகள்களின் டிகிரி, பிஹெச்டி உள்பட அனைத்தையும் அவரது அம்மா தான் கவனித்துக் கொண்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை புரிந்து கொள்ளும் மனைவி அமைந்ததால் தனக்கு பிசினஸில் முழு ஈடுபாடு இருந்தது என்றும் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்யாமல் இருந்தது குறித்து மனவருத்தம் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமும் அது 6:20 மணிக்கு நான் அலுவலகத்துக்கு சென்று விடுவேன் என்றும் இரவு 8 அல்லது 9 மணி வரை வேலை பார்த்துவிட்டு அதன் பிறகுதான் வீடு திரும்பினேன் என்றும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு என்னுடைய மனைவி எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொண்டார் என்றும் என்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் என்னுடைய மனைவி சுதா தான் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூர்த்தி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version