சினிமா

நானியின் ‘தசரா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Published

on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் நேற்று வெளியான தசரா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தசரா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தசரா திரைப்படம்

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேற்று வெளியான ‘தசரா’ திரைப்படம், முதல் நாளில் இந்திய அளவில் ரூபாய் 38 கோடியை வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக தசரா திரைப்படம் நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, சாய்குமார் மற்றும் தீக் ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது.

முதல் நாள் வசூல்

ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான தசரா திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படம் முதல் நாளில் இந்திய அளவில் 38 கோடி ரூபாய் வரை வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version