சினிமா செய்திகள்

ரூ.100 கோடி வசூலைக் கடந்து நானியின் ‘தசரா’ திரைப்படம் சாதனை!

Published

on

கடந்த மார்ச் மாத இறுதியில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலருடைய நடிப்பில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் தசரா. மேலும், இத்திரைப்படத்தை பான் இந்தியா படமாகவும் வெளியினாது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தசரா திரைப்படம், வசூலையும் வாரிக் குவித்து வருகிறது.

ரூ.100 கோடி வசூல்

தற்போது நானி நடித்துள்ள தசரா திரைப்படம், ரூபாய் 100 கோடி வசூலை கடந்துள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நானி கதாநாயகனாக நடித்த திரைப்படம் ஒன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் இசை, சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு ஆகியவை இந்த திரைப்படத்தில் அதிகமாக பாராட்டப்பட்டது.

100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததன் மூலமாக நடிகர் நானி, தெலுங்கு நடிகர்கள் வரிசையில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் மூன்றாம் கட்ட கதாநாயகனாக மட்டுமே இருந்து வந்த நடிகர் நானி, தசரா திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலமாக முன்னணி நடிகர்களுடன் போட்டி போடவும் ஆரம்பித்து உள்ளார்.

‘தசரா’ திரைப்படத்தினை பல தெலுங்கு சினிமாப் பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது நானியின் திரையுலக வாழ்வில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version