சினிமா

நடிகை நந்திதா வீட்டில் இப்படி ஒரு சோகமா? – ரசிகர்கள் ஆறுதல்…

Published

on

ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அந்த படத்தை விட, விஜய்சேதுபதியுடன் அவர் ஜோடியாக நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக நடித்து, மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி, கலகலப்பு2 ,தேவி 2, உப்புக்கருவார் உள்ளிட்ட பல் படங்களில் நடித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் வேறு மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவரின் தந்தை சிவசாமி(54) இறந்துவிட்டதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதையத்து, அவரின் தந்தையின் மரணத்திற்கு நடிகர், நடிகையர், திரை உலகினர் மற்றும் ரசிகர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version