இந்தியா

வேலை முடிந்தது: நிறுத்தப்பட்டது நமோ டிவியின் ஒளிபரப்பு!

Published

on

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக நமோ டிவி என்ற சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது விதிகளுக்கு எதிரானது எனவும், உரிய அனுமதியில்லாமலும், விதிகளை மீறி நமோ டிவி தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஆனாலும் எதிர்ப்புகளையும் தடைகளையும் தாண்டி நமோ டிவி ஒளிபரப்பு நடந்தது. 24 மணி நேரமும் மோடியின் சாதனைகள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமே அந்த சேனலில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் மே 17-ஆம் தேதி தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் அன்று இரவே நமோ டிவியின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய பாஜக தலைவர் ஒருவர், தேர்தல் முடிந்துவிட்டதால் இனி அந்த சேனலுக்கு வேலை இல்லை. எனவே அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version