சினிமா செய்திகள்

17 வயதில் நமீதா இப்படியா இருந்தார்? புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்!

Published

on

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான நமீதா 17 வயதில் தான் இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 17 வயதில் நடிகை நமீதா இப்படியா இருந்தார் என ரசிகர்கள் அதை புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை நமீதா என்பதும் அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

விஜயகாந்த் நடித்த ’எங்கள் அண்ணா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் மகா நடிகன், இங்கிலீஷ்காரன், பம்பரக்கண்ணாலே, அழகிய தமிழ் மகன், இந்திரவிழா, ஜெகன் மோகினி, பில்லா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை நமிதா கலர் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கன்னித்தீவு உல்லாச உலகம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்றும் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 17 வயதாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு முதன்முதலாக தான் நடிப்பதற்காக போட்டோஷூட் எடுக்கப்பட்டபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தில் நடிகை நமீதா அனைவரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஸ்லிம்மாக இருந்தார் என்பதும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்து கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version