தமிழ்நாடு

முதல் புள்ளியாக நின்ற வைகோ: நன்றி சொன்ன நக்கீரன் கோபால்!

Published

on

சென்னையில் நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என நீதிமன்றம் விடுதலை செய்தது. இது தமிழகம் முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்து பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில் வெளியே வந்த நக்கீரன் கோபால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து நன்றி கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், கைது பண்ணி சிந்தாதிரிப்பேட்டையில் வச்சிருந்தப்போ என்கிட்ட வந்து வைகோ சார் வந்திருக்கார்னு சொன்னாங்க. எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது.

அரசியல் தலைவரா இல்லாம ஒரு வழக்கறிஞரா வந்திருக்கிறதா சொன்னாங்க. ஒரு ஆஜானுபாகுவான வழக்கறிஞர் நமக்கு ஆதரவா இருந்தா நல்லதுதானேனு எனக்கு மகிழ்ச்சியா இருந்தது. ஆனால் நேரமாகியும் அண்ணன் உள்ளே வரவில்லை. என்னனு கேட்டப்போ, அவர் வந்துட்டு கத்திட்டு போய்ட்டாருன்னு சொன்னாங்க. எனக்கு என்ன விஷயம்னு தெரியல.

அப்புறம் மருத்துவமனையில் வந்து பார்த்த ஸ்டாலின் அண்ணன் சொன்னார், வைகோ கலக்கிட்டார், தர்ணாலாம் பண்ணி பெரிய இஸ்யூ ஆக்கிட்டார்னு சொன்னாங்க. இப்படி, இந்த நல்ல முடிவு கிடைக்க முக்கிய காரணமா எல்லோரும் ஒற்றை கோடாக நிற்பதற்கு முதல் புள்ளியாக நின்றவர் அண்ணன் வைகோ. அவருக்கு நம்ம சார்பா, ஊடகம் சார்பா நக்கீரன் சார்பா அவருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version