தமிழ்நாடு

நிர்மலா தேவி விவகாரம்: ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் அதிரடி கைது!

Published

on

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து அவரது பணியில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாரை அடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து புனே செல்ல விமான நிலையம் வந்த நக்கீரன் கோபாலிடம் தனிப்படை போலீசார் கைது செய்ய உள்ளதற்கான விவரங்களை தெரிவித்து அவரை கைது செய்தனர்.

விமான நிலையத்தில் வைத்து ஒரு மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார். அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நக்கீரன் கோபாலிடம் வாக்குமூலம் பெற்று பின்னர் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டது தொடர்பாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நக்கீரன் கோபால் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விரைவில் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version