கிரிக்கெட்

நாக்பூர் டெஸ்ட்: நிதான ஆட்டத்தால் வலுவான நிலையில் இந்தியா!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிதானமாக விளையாடிய இந்திய அணி 144 ரன்கள் முன்னணியில் வலுவான நிலையில் உள்ளது.

#image_title

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய வீரர்கள் சீரான இடைவெளியில் நடையை கட்டினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை சரணடைய வைத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தாலும் கேப்டன் ரோகித் ஷர்மா பொறுப்பாக விளையாடி 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கே.எல்.ராகுல் 20, அஷ்வின் 23, புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யக்குமார் யாதவ் 8 என வரிசையாக நடையை கட்டினாலும், கேப்டன் ரோகித் ஷர்மா – ஜடேஜா இணை சிறப்பாக விளையாடியாடியது. ரோகித் ஷர்மா வெளியேறிய பின்னர் வந்த ஸ்ரீகர் பரத் 8 ரன்னில் அவுட் ஆக அக்சர் பட்டேல் களமிறங்கினார். இவர் ஜடேஜாவுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்க இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் தினறினர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 312 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இதன் மூலம் 144 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 66 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 52 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் டோட் மர்ஃபி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Trending

Exit mobile version