கிரிக்கெட்

நாக்பூர் டெஸ்ட்: முதல் நாளிலேயே இந்தியாவிடம் சரணடைந்த ஆஸ்திரேலியா!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

#image_title

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்து திணறிய ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் , ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய மேட் ரென்ஷாவும் வந்த வேகத்தில் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க கடுமையாக போராடியது. சிறப்பாக விளையாடிய இவர்களை ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் வெளியேற்றினர்.

இதனையடுத்து களமிறங்கிய யாரும் இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நடையை கட்டினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை சரணடைய வைத்தனர். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Trending

Exit mobile version