Connect with us

சினிமா

தமிழில் டப்பிங் பேசியுள்ள நாகசைதன்யா- வெளியானது ‘கஸ்டடி’ டீசர்!

Published

on

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவலாக வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ள நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார். தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக படத்தின் தமிழ் பதிப்பில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். ஆக்‌ஷன் பேக்ட் படமாக உருவாகி இருக்கும் இதன் டீசரிலும் இவரது குரல் வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடியத் திரைப்படமாக இது அமைந்திருக்கிறது. படத்தின் டேக் லைனாக அமைந்துள்ள ‘A Venkat Prabhu Hunt’, இயக்குநர் வெங்கட்பிரபுவின் ரசிகர்களிடையேயும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபு பல்வேறு ஜானர்களில் இதற்கு முன்பு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்த முறை ‘ஆக்‌ஷன் எண்டர்டெயினர்’ என்ற ஜானரில் தன் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளார்.

’கஸ்டடி’ படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அப்பா-மகன் ஒரே படத்தில் இசைக்காக இணைந்திருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா மற்றும் யங் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்காக இசையமைத்து இருக்கிறார்கள்.

வெளியாகியுள்ள டீசரில் நாக சைதன்யா, அரவிந்த் சுவாமி மற்றும் சரத் குமாருக்கும் இடையிலான கேட் அண்ட் மவுஸ் கேம் பற்றிய விஷயங்கள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் ரசிகர்களை கவரக்கூடிய நடிகர் அரவிந்த் சுவாமி இந்தப் படத்திலும் தன் ரசிகர்கள் விரும்பக்கூடிய சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

‘கஸ்டடி’ திரைப்படம் உலகம் முழுவதும் மே 12 அன்று திரையரங்குகளில் தமிழ் & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. நாக சைதன்யாவின் சினிமா பயணத்தில் அதிக அளவிலான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!