சினிமா செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்!

Published

on

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் சிவாஜி கணேசனின் புகைப்படங்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தார். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகின் பிரபல நடிகராக இருந்த அவர் பராசக்தி என்ற திரைப்படத்தின் கடந்த 1952 ஆம் ஆண்டு அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் பல விருதுகளை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன் நடிப்பில் பின்பற்றி தான் இன்றைய நடிகர்கள் உள்பட பல நடிகர்கள் நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், விஜய் உள்பட பலர் அவருடன் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. சிவாஜிகணேசன் கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி தனது 72வது வயதில் காலமானார்.

சிவாஜிகணேசனுக்கு ராம்குமார் பிரபு ஆகிய 2 மகன்கள் சாந்தி தேன்மொழி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி கணேசனுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே விருது, செவாலியே விருது, என்டிஆர் தேசிய விருது மற்றும் கலைமாமணி விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version