சினிமா செய்திகள்

பதிவான வாக்குகளை விட அதிகம்: நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Published

on

பதிவான வாக்குகளை விட வாக்குப் பெட்டியில் அதிக வாக்குகள் இருந்ததால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை ஐகோர்ட் தடை உத்தரவுப் பிறப்பித்த நிலையில் சமீபத்தில் தான் இந்த வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது .

இதனை அடுத்து இன்று காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கிய நிலையில் இந்த பதவிக்கால பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் அதிகமாக இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

டுணைத் தலைவர் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் இருந்த நிலையில் ஐந்து வாக்குச்சீட்டுகள் அதிகமாக இருந்ததால் ஐசரி கணேஷ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version