சினிமா செய்திகள்

ரஜினி ஓட்டுப் போடாததற்கு கமல் என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

நடிகர் சங்க தேர்தல் நேற்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால், நடிகர் ரஜினிகாந்தால் வாக்களிக்க முடியவில்லை.

சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 50 – 60 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. சூர்யா, விஜய், விக்ரம், கமல் ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் தங்களது வாக்கினை செலுத்தினர். ஆனால், இந்த தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தால் வாக்களிக்க முடியவில்லை. காரணம் தபால் ஓட்டு இல்லாதது தான்.

தனது வாக்கினை பதிவு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கமல், ”நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version