சினிமா செய்திகள்
தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
2019ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது என்பதும் நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சமீபத்தில்தான் எண்ணப்பட்டது என்பதும் தெரிந்ததே .
இந்த தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் உட்பட அனைவரும் வெற்றி பெற்றனர் .
இந்த நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகளாக பொறுப்பு ஏற்க இருக்கும் நாசர், விஷால், பூச்சிமுருகன், கார்த்தி ஆகியோர் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நடிகரும் சேப்பக்கம் எம்.எல்.வுமான உதயநிதி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர் என்று கூறப்படுகிறது.