சினிமா

நடிகர் சங்க தேர்தல் ரத்து? நிர்வாகிகள் நீக்கம் எதிரொலி!

Published

on

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவிஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து, பாக்கியராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட சுவாமி சங்கரதாஸ் என்ற அணி போட்டியிடுகிறது.

இந்நிலையில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த தேர்தல் ரத்தாகும் சூழல் ஒன்று உருவாகியுள்ளது. தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதி பிரியன் உள்ளிட்ட 61 பேர், சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். சங்க விதிமுறைகளை மீறி உறுப்பினர்களை நீக்கியது தொடர்பாக நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் 68 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version