சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் இவர் தான்!

Published

on

கடந்த இரண்டு வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் மொத்தம் உள்ள 18 போட்டியாளர்களில் எதிர்பாராத காரணத்தினால் நமீதா விலகிவிட்டதை அடுத்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த திங்களன்று இந்த வாரம் ஒரு போட்டியாளரை வெளியேற்றுவதற்காக நாமினேஷன் பட்டியல் நடந்தது என்பதும் அந்த நாமினேஷனில் தலைவி தாமரைச்செல்வி மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரை தவிர மீதமுள்ள 15 போட்டியாளர்களின் பெயர் இடம்பெற்று இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது 10 போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்ததை அடுத்து மீதமுள்ள ஐந்து போட்டியாளர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அபிஷேக் அல்லது சின்னப்பொண்ணு ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் திடீர் திருப்பமாக இன்று வெளியேற இருப்பவர் நாடியா சாங் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலேசிய மாடல் அழகியான நாடியா சாங் தமிழ் மீது மிகுந்த பற்று உள்ளவர் என்பதும் டிக் டாக் மற்றும் யூட்யூப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அவருடைய வீடியோ மிகவும் பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான நாடியா சாங், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மலேசியாவில் இருந்து வந்திருந்த நிலையில் முதல் நபராக போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவது மலேசியத் தமிழர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version