சினிமா செய்திகள்

‘த்ரிஷ்யம் 2’ படத்தில் நதியா: வைரலாகும் வீடியோ!

Published

on

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ‘த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்தையும் பல மொழிகளில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக் படம் உறுதி செய்யப்பட்டது என்பதும் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் நதியா போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

‘த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தில் நதியா தான் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘த்ரிஷ்யம் 2’படத்திற்காக மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் நடிகர் வெங்கடேஷ், மீனா நடித்த கேரக்டரில் மீனாவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CMcLuneDfmo/

seithichurul

Trending

Exit mobile version