சினிமா செய்திகள்

நதியாவின் 20 வயது மகளுக்கு பிறந்த நாள்: குவியும் வாழ்த்துக்கள்

Published

on

கடந்த எண்பதுகளில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை நதியாவின் மகளுக்கு 20 வயது ஆனதையடுத்து அவரது பிறந்த நாள் வெகு சிறப்பாக அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்

பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சுரேஷ் உள்ளிட்ட பல பிரபல நடிகருடன் இணைந்து நடித்த நதியா, பல திரைப்படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களிலும் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 1988ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த சிரிஷ் என்பவரை நதியா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு சனம் மற்றும் ஜனா ஆகிய இரண்டு மகள்கள் பிறந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நதியாவின் இரண்டாவது மகள் ஜனாவின் 20 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

நதியாவின் மகளை பார்த்த நெட்டிசன்கள் அசந்து போய் அவர் நதியா மாதிரியே இருப்பதாகவும் நதியாவும் அவருடைய மகளும் அக்கா-தங்கை போல் இருப்பதாகவும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CM3nb78jbc3/

Trending

Exit mobile version