வணிகம்

மாத சம்பளக்காரர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் மகிழ்ச்சி செய்தி!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் விதிகளில் புதிய மாற்றத்தைச் செய்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தால் 2021, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வங்கி விடுமுறை உள்ளிட்ட எல்லா நாட்களிலும் வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

தேசிய தானியங்கி கணக்குத் தீர்வகம் கீழ் தான் மாத சம்பளம், பென்ஷன், டிவிடண்ட், வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த பரிவர்த்தனைகளை வங்கி விடுமுறை நாட்களில் செய்ய முடியாது.

ஆனால் 2021, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை அல்லது வங்கி விடுமுறை நாளாக இருந்தாலும் மாத சம்பள தாரர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வந்துவிடும். பென்ஷன் தொகையும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். முன்பு சம்பள தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது வங்கி விடுமுறை நாட்களிலிருந்தால் ஒரு நாள் முன்பு அல்லது விடுமுறைக்கு அடுத்த வேலை நாட்களில் தான் அளிக்கப்பட்டு வந்தது. எனவே மாத சம்பளக்காரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவை மட்டுமல்லாமல் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், ஆன்லைன் வங்கி சேவையில் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் பரிமாற்றத்தை செய்ய முடியும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version