வேலைவாய்ப்பு

நபார்டு வங்கி வேலை!

Published

on

நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 91. இதில் விரிவாக்க உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 91

வேலை: Development Assistant – 82

வேலை: Development Assistant (Hindi) – 09

கல்வித்தகுதி: Development Assistant வேலைக்கு ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Development Assistant (Hindi) வேலைக்கு ஹிந்தி, ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.09.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.32,000

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றித் திறனாளிகள் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.450 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கியின் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

மேலும் முழு விவரங்கள் அறிய www.nabard.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 14.09.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 02.10.2019

seithichurul

Trending

Exit mobile version