தமிழ்நாடு

“வீட்டிலிருந்தபடியே அனைவருக்கும் அரசு வேலை”- விவரிக்கும் நாம் தமிழர் வேட்பாளர்- நெட்டிசன்ஸ் கிண்டல்

Published

on

நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும் சமமாக இடங்களை ஒதுக்கி களத்தில் நிற்கிறது நாம் தமிழர். அந்தக் கட்சியின் தலைமைப் பேச்சாளரான சீமான், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில் அந்த நபர், ‘தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அரசு வேலை கொடுப்பது தான் எங்கள் லட்சியம். வீட்டில் இருந்தபடியே இல்லத்தரசிகளுக்கு அரசு வேலை.

எப்படி என்று நான் விளக்குகிறேன். கோழி, ஆடு, மாடு என எல்லாவற்றையும் உங்களுக்கு நாங்களே எடுத்து வந்து தருவோம். அதை வளர்த்து பால், முட்டை, கறியை நீங்கள் அரசிடம் கொடுத்தால் போதும். இந்த வேலை பார்க்கும் அனைவருக்கும் அரசு சம்பளம் போட்டுத் தரப்படும்’ என்கிறார்.

இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கேலிகள் எழுந்து வருகின்றன.

Trending

Exit mobile version