தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: சாட்டை முருகன் கைது!

Published

on

முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்ற பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அப்போது யூடியூப் பிரபலம் சாட்டை முருகன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக செய்திகள் வெளியானது

இதனை அடுத்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை அடுத்து நாகர்கோவில் போலீசார் நாங்குநேரியில் வைத்து சாட்டை முருகனை கைது செய்தனர். தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாட்டை முருகன் சமீபத்தில்தான் ஜாமினில் வெளி வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சாட்டை முருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது முதல்வரையும் தமிழக அரசியலும் அரசையும் அவதூறாகப் பேசியது ஆகிய பிரிவுகளில் சாட்டை முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அவரை வரும் 25ஆம் தேதி வரை நாங்குநேரி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version