தமிழ்நாடு

தேர்தல் அறிக்கையே வெளியிடாமல் 234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி

Published

on

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று இரவு 7 மணி உடன் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு அரசியல் கட்சியும் குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன என்பதும் அந்த தேர்தல் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையே இல்லாமல் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்ட கொண்டே வந்தது.

இந்த நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் தேர்தல் அறிக்கை இன்னும் அந்த கட்சி வெளியிடவில்லை என்பதும் இனிமேல் வெளியிட வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறிய போது போதிய நிதிவசதி இல்லாததால் தேர்தல் அறிக்கை வெளியிட முடியவில்லை என்று கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் 234 தொகுதிகளிலும் வெறும் வாயால் கூறும் வாக்குறுதிகளை மட்டுமே நம்பி போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து, ஆறு தொகுதிகளில் நிற்கும் சின்ன சின்ன கட்சிகள் கூட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் 234 தொகுதிகளிலும் நிற்கும் ஒரு கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடாமல் இருப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version