தமிழ்நாடு

’தகைசால் விருதில் கிடைக்கும் ரூ.10 லட்சத்தை சங்கரய்யா என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்த பெரியோர்களுக்கு ’தகைசால் விருது’ என்ற உயரிய விருதை அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இந்த விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக இந்த விருதைப் பெறுவதற்கு என் சங்கரய்யா அவர்களை விருதுக் குழுவினர் தேர்வு செய்தனர்.

இந்த விருதை பெறும் மூத்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என் சங்கரய்யா அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூபாய் 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் 100வது பிறந்தநாளை கொண்டாடிய சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது அவருக்கு இந்த விருது அளிக்க உள்ளார் என்பதும் இந்த விருது வரும் சுதந்திர தினத்தின் போது அவருக்கு அளிக்கப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு அளிக்கப்படும் தகைசால் விருதில் கிடைக்கும் ரூபாய் 10 லட்சத்தை நிவாரண நிதியாக முதலமைச்சருக்கு வழங்க உள்ளதாக சங்கரய்யா அறிவிப்புச் செய்துள்ளார். விருது தொகை 10 லட்சத்தில் தான் ஒரு ரூபாய் கூட எடுத்துக் கொள்ளாமல் மொத்த பணத்தையும் அவர் முதலமைச்சர் நிவாரண நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version