இந்தியா

2வது முறையாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான தமிழர்!

Published

on

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டாடா சன்ஸ்குழுமத்தின் தலைவராக ஏற்கனவே தமிழரான என். சந்திரசேகரர் பதவி வகித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் அவர் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அடுத்த 5 ஆண்டுகளுக்குள் டாடா சன்ஸ் குழுமத்தை வழி நடத்துவது குறித்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் என்.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியை ஏற்க இருக்கும் என்று சந்திரசேகர் தமிழகத்தில் உள்ள கோவையைச் சேர்ந்தவர். கோவையில் அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு அதன் பின் திருச்சியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். கடந்த 1987ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்த அவர் 2009ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார். அவரது பதவிக் காலத்தில்தான் டாடா நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் டாடா சன்ஸ் குடும்பத்தின் தலைவர் பதவியை ஏற்க இருக்கும் என் சந்திரசேகர் அவர்கள் ஏர் இந்தியா நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version