பல்சுவை

உலகின் பல இடங்களில் திடீரென உதித்த ‘மர்ம உலோகம்’; இந்தியாவிலும் தோன்றியுள்ளது!

Published

on

உலகின் பல இடங்களில் கடந்த சில மாதங்களாக ‘மர்ம உலோகம்’ ஒன்று பூமியின் அடியிலிருந்து எழுந்து வருகிறது. அந்த பலபலப்பான மாய உலோகம் ஏன் தோன்றியது என்பது குறித்து இதுவரை அறிவியல் பூர்வமாக எவ்வித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை. மிகுந்த அச்சத்தையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது இந்த திடீர் உலோகம். இந்நிலையில் இந்தியாவிலும் அப்படியொரு மோனோலித் உலோகம் தோன்றியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில்தான் அந்த உலோகம் தலை காட்டியுள்ளது. இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதுவரை சுமார் 30 நாடுகளில் இந்த மோனோலித் மர்ம உலோகங்கள், திடீரென்று பூமிக்கு அடியிலிருந்து எழுந்துள்ளன. அமெரிக்காவின் உட்டா மாகாணத்திலும் அது தோன்றியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அகமதாபாத்தின் அரசுக்குச் சொந்தமான பூங்கா ஒன்றில் தோன்றிய மர்ம உலோகம், குறித்து, ‘மக்களைக் கவரும் நோக்கில் நாங்கள்தான் அதை நிறுவியுள்ளோம்’ என்று அரசுத் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. மக்கள் பீதியடையக் கூடாது என்னும் நோக்கில் அரசு இப்படி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் இந்த திடீர் மானோலித்துகள் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று புரியாமல் பலரும் திணறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version