உலகம்

புதிய கண்டுபிடிப்பாளர்களின் மர்ம மரணங்கள்.. வரலாற்றின் மர்ம பக்கங்கள்..!

Published

on

உலகளவில் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பலர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். அவர்களைப் பற்றிய மர்ம பக்கங்கள் குறித்த சிறிய தொகுப்பினை செய்தி சுருள் இங்கு அளிக்கிறது.

ஜி இச் சி மார்கோனி

1980களில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த STRATEGIC DEFENCIVE INTIATIVE எனும் பாதுகாப்பு முயற்சியை ரோனல்ட் ரீகன் அறிமுகம் செய்தார். இதன் மூலம் விண்வெளியிலிருந்து வரும் ஏவுகணைகளை லேசர் கொண்டு தாக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. 1982 முதல் 1990 வரை ஜி இச் சி மார்கோனி தலைமையில் 25 பிரிட்டன் ஆய்வாளர்கள் பணியாற்றினர். இவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து விட்டனர். சிலர் இவர்கள் சோவியத் உளவாளிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் அரசாங்கமே இவர்களைக் கொலை செய்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

டேவிட் கெல்லி

2003 ஆம் ஆண்டு உயிரியல் போர்முறை வல்லுநர் டேவிட் கெல்லி இராக்கில் பிரிட்டன் அரசாங்கம் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து வழங்கிய பொய் தகவல்களை ரகசியமாக அம்பலப்படுத்தினார். இந்தத் தகவல் பிரதமர் டோனிப்ளேருக்கு தெரிய வந்ததும் இது குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது நாள் கெல்லி தனது வீட்டில் இறந்து கிடந்தார். காவல்துறை இதனைத் தற்கொலை என்று கூறியது.

டான் வைலே

2௦௦1 ஆம் ஆண்டில் அணு ஆயுத வல்லுநராகத் திகழ்ந்த டான் வைலேவின் கார் மிசிசிபி ஆற்றின் பாலம் ஒன்றில் ஆன் செய்யப்பட நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த்ராக்ஸ் தாக்குதல் பரவி வந்த நேரம். சில நாட்கள் கழித்து இவர் மற்றும் இன்னொரு ஆராய்ச்சியாளரான விளாடிமிர் சைனிக் ஆகியோரின் உடல் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

ரோட்னி மார்க்ஸ்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வானவியல் நிபுணர் ரோட்னி மார்க்ஸ் சவுத் போல் ஆய்வு மையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின்னர் மெதனால் விஷம் மூலம் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

போலார் ஆய்வாளர்கள்

2013 ஆம் ஆண்டு உலா வெப்பமயமாதலின் தாக்கம் குறித்த ஆய்வுகள் செய்து வந்த மூன்று ஆய்வாளர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவர்கள் அமெரிக்க அரசாங்கத்தாலோ அல்லது எண்ணெய் நிறுவன அதிபர்களாலோ கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இன்று வரை இவர்களின் மரணங்கள் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப் படாமல்தான் உள்ளன.

Trending

Exit mobile version