சினிமா செய்திகள்

சினிமா காதலர்கள் விஜய்-க்கு ஆதரவு தரணும்- இயக்குநர் மிஷ்கின் வேண்டுகோள்

Published

on

சினிமா காதலர்கள் கண்டிப்பாக நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்துக்கு ஆதரவு தர வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் தனது ரசிகர்கள், தளபதி விஜய் ரசிகர்கள் உட்பட அத்தனை சினிமா ரசிகர்களும் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்த்து ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியக் கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

மிஷ்கின் தனது பிசாசு 2 திரைப்படத்துக்கான அடுத்த போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதே வாழ்த்துடன் தனது ட்விட்டர் பதிவில், “கதைகளும் சினிமாக்களும் இல்லாமல் நம்முடைய வாழ்க்கை அர்த்தம் இல்லாது ஆகிவிடும். மீண்டும் குடும்பங்களுடன் தியேட்டர்களுக்குச் செல்வோம். குறிப்பாக நான் வருகிற ஜனவரி 13 அன்று மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கக் காத்திருக்கிறேன். அத்தனை சினிமா ரசிகர்களும் மீண்டும் திரை அரங்கங்களுக்கு அதிகப்படியாக சென்று சினிமா தொழில் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுகிறேன்” என்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version