டிவி
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மைனா நந்தினியின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு?
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தினமும் ஒரு பரபரப்பு என சென்றுகொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் வராத மைனா, இரண்டாவது நாள் வீட்டிற்குள் நுழைந்தார்.
போட்டியை வெல்ல இவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக முதலில் பார்க்கப்பட்டாலும், இவர் பெரிதாக எந்த போட்டிகளிலும் சோபிக்கவில்லை. ஆனால் 3 முறை பிக்பாஸ் வீட்டின் தலைவர் போட்டியில் மட்டும் இவர் எப்படி வென்றார் என்பது பலருக்கும் இருக்கும் கேள்விதான்.
இந்நிலையில் இந்த வார இடையில் நடத்தப்படும் எவிக்ஷன் பிராசஸ் என அறிவித்த பிக்பாஸ், புதிய முறையில் மைனா நந்தினியை வீட்டு வெளியே அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க மைனா நந்தினிக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்ச் வீட்டில் மைனா நந்தினிக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
100 நாட்கள் இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்துள்ளார்.