உலகம்

மியான்மரில் அடுத்த அதிரடி: ஃபேஸ்புக், டுவிட்டர் முடக்கம்!

Published

on

மியான்மர் நாட்டில் சமீபத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் முக்கிய தலைவரான ஆங் சான் சூகி உள்பட பல முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மியான்மரில் முக்கிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மியான்மர் நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

மியான்மர் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி திடீரென ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனை அடுத்து முக்கிய அரசியல்வாதிகள் அனைவரும் வீட்டுச் சிறையில் இருக்கும் நிலையில் அவர்களுடைய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தும் பகிர்ந்தும் வருவதாக கூறப்பட்டது

இதன் அடிப்படையில்தான் தற்போது மியான்மரில் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது

Trending

Exit mobile version