Connect with us

உலகம்

ரணகளத்திலும் கிளுகிளுப்பு.. பின்னால் மிகப்பெரிய ரணுவ சதி நடப்பது கூட தெரியாமல் நடனமாடிய பெண்

Published

on

மியான்மரில் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டிருந்த நேரத்தில் நாடாளுமன்ற கட்டிட வளாகத்திற்கு வெளியே பெண் ஒருவர் தன்னுடைய வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மியான்மரில் அதிரடியான அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி நேபாள ராணுவம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகி, ஜனாதிபதி உள்ளிட்டோர் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்பு அறிவிக்கப்பட்ட அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிதாக 11 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த ஒரு வருடத்திற்கு அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்தியா தேவையில்லாமல் மியான்மர் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இப்படி உலகமே கவனித்த முக்கியமான அரசியல் நடவடிக்கை தனக்கு பின்னல் நிகழ்ந்துகொண்டு இருந்த நேரத்தில் ஒரு பெண் எதையும் கவனிக்காமல் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மியான்மர் தலைநகரில் கிங் ஹின் எனும் பெண் வழக்கமாக தன்னுடைய ஏரோபிக்ஸ் எனும் உடற்பயிற்சியை நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே நின்று படம் பிடித்துக்கொண்டிருந்தார். இசையில் மூழ்கியபடி மிக தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டும் அதை படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னல் ராணுவ கான்வாய்கள், வாகனங்கள் எல்லாம் வேகமாக நாடாளுமன்றத்திற்குள் சென்று கொண்டிருந்தது. மியான்மர் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடைபெறும் நிகழ்வை கூட அறியாமல் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த பெண்ணின் வீடியோ வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை கிங் ஹின் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

அதுகுறித்து கூறியுள்ள கிங் ஹின், கடந்த 11 மாதங்களாக நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னாள் நின்று தான் உடற்பயிற்சி செய்வதாகவும் அன்றும் அதே போல் நடைபெற்ற வழக்கமான நிகழ்வு தான் என்றும் கூறியிருக்கிறார். 2021-க்கு ஒரு வீடியோவை குறிப்பிடலாம் என்றால், உங்கள் பின்னால் மிகப்பெரிய அரசியல் சதித்திட்டம் நடைபெற்று கொண்டிருப்பதை கூட தெரியாமல் உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவை குறிப்பிடலாம் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

மியான்மரில் நேர்மையான தேர்தல் நடைபெற்ற பின்பு மீண்டும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ராணுவம் தற்போது கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்15 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!