சினிமா

என் தந்தை கமல் தலைமையில் எனது திருமணம் நடக்கும்: சுஜா வருணி!

Published

on

நடிகை சுஜா வருணி தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும், பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

மேலும், சமீபத்தில் வெளியான கிடாரி மற்றும் ஆண் தேவதை படங்களிலும் சுஜா வருணி நடித்துள்ளார். இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் என்ற சிவகுமாருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

இந்த திருமணத்திற்கான முதல் அழைப்பிதழை நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வைத்துள்ளார் சுஜா வருணி. மேலும், தனது தந்தை சமீபத்தில் மறைந்ததால், தந்தை ஸ்தானத்தில் இருந்து கமல் தான் நடத்தி வைக்க உள்ளார் என்றார்.

சிவாஜி குடும்பத்துக்கும் கமலுக்கும் ஏற்கனவே திரையுலகம் தாண்டிய பந்தம் இருப்பதால் கமல் தலைமையிலேயே இந்த திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version