உலகம்

நாகேஸ்வர ராவ் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டின் ஒரே தீர்ப்பு.. பின் விளைவுகள் என்ன தெரியுமா?

Published

on

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

முசாபர் நகர் குழந்தைகள் காப்பக பாலியல் வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் பணியிட மாற்றம் செய்தார். இதனால் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாகேஸ்வர ராவ் தண்டிக்கப்பட்டுள்ளார்.

நாகேஸ்வர ராவ் செய்தது தவறுதான் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் பல முக்கிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது.

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவிற்கு சுப்ரீம் கோர் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதேபோல் இன்றுமாலை வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் அலுவலகத்திற்குள் இருக்க வேண்டும் என்று உத்தரவுபிறப்பித்துள்ளது .

அதேபோல் இவர் பணியிட மாற்றம் செய்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை மீண்டும் பீகார் வழக்கை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உடனே இதற்கான பணியாணையை பெற்று, சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை உடனே பணியை தொடங்கும்படி நீதிமன்றம் கூறியுள்ளது..

seithichurul

Trending

Exit mobile version