தமிழ்நாடு

ரஜினியை அடுத்து மற்றொரு நடிகரை இழுக்க முயற்சி: பாஜக மீது முத்தரசன் குற்றச்சாட்டு!

Published

on

ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து மற்றொரு பிரபல நடிகரை இழுக்க முயற்சி நடந்து கொண்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக தீவிர முயற்சி செய்தது. இதற்காக பாஜக தரப்பில் இருந்து பலர் ரஜினியிடம் தூது சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஜினி கழுவுற மீனில் நழுவுற மீனாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறி தப்பித்து விட்டார். இந்த நிலையில் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் மற்றொரு பிரபல நடிகரை பாஜக பயன்படுத்த முயல்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். அந்த பிரபல நடிகர் யார் என்பதை அவர் தெரிவிக்க மறுத்து விட்டாலும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்த செய்தி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version