இந்தியா

மே 23-ம் தேதி பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என பெயரிட்ட இஸ்லாமியத் தம்பதிகள்!

Published

on

மே 23-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்கெண்ணிக்கையின் போது பிறந்த குழந்தைக்கு, உத்திர பிரதேசம் இஸ்லாமியத் தம்பதிகள் நரேந்திர மொடி எனப் பெயரிட்டுள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் கோண்டாவில் உள்ள மீனாஜ் பேகமின் கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

மே 23-ம் தேதி மக்களவை தேர்தலின் போது இவர்களுக்குக் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் துபாயில் உள்ள மீனாஜ் பேகமின் கணவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதே கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவர் தேர்தல் முடிவுகளில் யார் முன்னிலையில் உள்ளார் என்று கேட்டுள்ளார். மோடி என்று கூற, நரேந்தர மோடியின் பெயரை தனது மகனுக்கு சூட்டுமாறு கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் 2019-ல் தேசிய ஜனநாக கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதில் அதிகபட்சமாக 303 தொகுதிகளில் பாஜகவும், 18 தொகுதிகளில் ஷிவ சேனாவும், 16 தொகுதிகளில் ஜேடியூ கட்சியும், அதிமுக 1 தொகுதியிலும் வெற்றிபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version