சினிமா செய்திகள்

என் தம்பி யுவன் பாடல் சூப்பர்: ‘வலிமை’ அப்டேட் தந்த இசையுலக பிரபலம்!

Published

on

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டாலும் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் கடுப்பாகி பிரதமர் மோடி உள்பட பலரிடம் ‘வலிமை’ அப்டேட்டை கேட்கத் தொடங்கிவிட்டனர்.

இதனால் அதிருப்தி அடைந்த அஜீத் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ’சரியான நேரத்தில் நானும் தயாரிப்பாளரும் பேசி ‘வலிமை’ அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அஜித்தின் இந்த அறிக்கையை அடுத்து ஒரு சில ரசிகர்கள் அப்டேட் கேட்பதை நிறுத்தினாலும் பலர் இன்னும் படத்திற்கு சம்பந்தமே இல்லாத நபர்களிடம் ‘வலிமை’ அப்டேட்டை கேட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் அவர்களிடம் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட்டை கேட்க, அவரும் ‘வலிமை’ குறித்த ஒரு தகவலை கூறியுள்ளார்.

‘வலிமை’ படத்திற்காக என் சகோதரர் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த ஒரு பாடலை சமீபத்தில் கேட்டேன்,. கேட்டவுடன் அசந்துவிட்டேன். அஜித்துக்கு இந்த பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் கருதினேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த அப்டேட்டை அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version