சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்க வரும் இசையமைப்பாளர்: ஹரி-அருண்விஜய் படத்தில் சிறப்பு தோற்றம்!

Published

on

பழம்பெரும் இசையமைப்பாளர் ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் ஹரி – அருண்விஜய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் திரையுலகில் ஜொலித்தவர் கங்கை அமரன் என்பது தெரிந்ததே. இசைஞானி இளையராஜாவின் சகோதரராக இருந்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து இசையமைத்துக் கொண்டிருந்தார் கங்கை அமரன்.

இந்த நிலையில் கங்கை அமரன் இயக்கிய ’கரகாட்டக்காரன்’ உள்பட பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் கங்கை அமரன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கங்கை அமரன் ஜோதிடர் வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது .இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வரும் நிலையில் காரைக்குடியில் கங்கை அமரன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கங்கை அமரன் நடிக்க வந்ததை அடுத்து அவருக்கு படக்குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version