பல்சுவை

தீபாவளிக்கு சுவையான முறுக்கு செய்வது எப்படி?

Published

on

தீபாவளி என்றால் விட்டில் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்வார்கள். சிறுவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று முறுக்கு. எனவே சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. கப் அரிசி மாவு – 1 ஆழாக்கு
2. உளுந்து – 1/2 கப்
3. பொட்டுக்கடலை – 100 கிராம்
4. ஓமம் – 1 ஸ்பூன்
5. வெள்ளை எள் – 2 ஸ்பூன்
6. உப்பு – தேவையான அளவு
7. பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
8. சீரகம் – 2 ஸ்பூன்
9. எண்ணேய் – தேவைக்கு

செய்முறை:

அரிசி கழுவி (ஊற வைக்கக்கூடாது) நன்றாக காய வைக்கவேண்டும். உளுந்தினை எடுத்து கடாயில் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும். பிறகு வறுத்து எடுத்த உளுந்தையும், அரிசி, பொட்டுக்கடலை ஆகியவை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முறுக்கு மாவு, ஓமம், எள், சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்புனை சேர்க்கவும். இவைகள் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவேண்டும்.

பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த உடன், முறுக்கு அச்சினில் வைத்து முறுக்கினை சற்று இடைவெளியோடு சுத்த வேண்டும். அவ்வாறாக இடைவெளிவிட்டால் தான் முறுக்கு சரியான அளவில் முழுமையாக எண்ணெய்யில் வேகும்.

முறுக்கு அச்சினில் சுற்றிய முறுக்கை வாணலியை உள்ள எண்ணெய்யில் போட்டு நன்றாக வேகவிட்டு நிறம் மாறாமல் எடுத்தால் சுவையான மொறுமொறுப்புடன் முறுக்கு ரெடி.

Trending

Exit mobile version