தமிழ்நாடு

நீதிபதி கூறியதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதா? தேர்தல் ஆணையம் கண்டனம்

Published

on

சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தேர்தல் ஆணையம் முக்கிய காரணம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு சரியானபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் தேர்தல் ஆணையம் மீது கொலை வழக்கு பதிவு செய்தாலும் தவறில்லை என்று நீதிபதிகள் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகளின் இந்த கருத்து கிட்டதட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீதிபதி வாய்வழியாக கூறிய ஒரு வார்த்தையை வைத்து ஊடகங்கள் செய்தியாக வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. அந்த முறையீட்டு மனுவில், ‘நீதிபதிகள் வாய் வார்த்தையாக சொல்வதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட கூடாது என்றும் அது தேர்தல் ஆணையத்தை கலங்கப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்காக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி கூறியதை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் மனு விசாரணை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version