தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொலைப்பழி: பரபரப்பில் தமிழகம்!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. இந்த நேரத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ள சம்பவங்களில் தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் இந்த பரபரப்பு தகவல்களை நேற்று மதியம் டெல்லியில் வெளியிட்டார். இது அதிமுக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசிய தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொடநாட்டில் நடந்த கொலைகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றார்.

கொடநாடு எஸ்டேட்டில் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை கைப்பற்றவே இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சதி அடங்கி இருக்கிறது. பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையில் ஈடுபட்ட சயோன் உள்ளிட்ட இருவரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.

அப்போது பேசிய அவர்கள், கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கியமான டாக்குமெண்டுகளை எடுக்க முதல்வர் பழனிசாமி 5 கோடி பணம் தருவதாக கனகராஜ் மூலமாக பேசியதாகவும், அதன் பின்னர் அந்த டாக்குமெண்டுகளை எடுத்துக்கொண்டு முதல்வர் பழனிச்சாமியிடம் கொடுக்க சென்ற டிரைவர் கனகராஜ் அடுத்த 5 நாட்களில் விபத்தில் மரணமடைந்தார்.

கனகராஜ் கொல்லப்பட்டதிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல அந்த 5 கோடி ரூபாயை கொடுக்கவில்லை. அதன் பின்னர் இந்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றோம். இதில் முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளது என்றனர். கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கும், கொள்ளைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக வெளியாகி உள்ள தகவல் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version