இந்தியா

இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்ததால் ரூ.13 லட்சத்தை இழந்த இளம்பெண்: நூதன மோசடி!

Published

on

சமூக வலைதளங்கள் என்பது பொழுதுபோக்கு மட்டுமின்றி தற்போது பணம் சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒரு சில சமூக வலைதளங்களில் இருந்து பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்தால் பணம் கிடைக்கும் என்று மெசேஜ் வந்ததை நம்பி மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரூபாய் 13 லட்சம் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏற்கனவே நல்ல வேலையில் இருக்கும் நிலையில் கூடுதல் பணியாக சமூக வலைதளங்கள் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜ்ஜில் சில இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஃபாலோ செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து அவர் அந்த மெசேஜில் உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் வந்த இன்ஸ்டாகிராம் கணக்கை அவர் ஃபாலோ செய்ததால் அவருக்கு உடனே ரூபாய் 210 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவர் அடுத்தடுத்து தனக்கு தெரிந்தவர்களையும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்ய வைத்தபோது அவருக்கு 2500 வரை என் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு டெலிகிராமுடன் இணைக்கப்பட்டு அதில் உள்ள நண்பர்களை குறிப்பிட்ட இன்ஸ்டகிரம் கணக்கில் ஃபாலோ செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து உள்ள அவருடைய நண்பர்களையும் அந்த குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்ய வைத்ததால் அவருக்கு வருமானம் கிடைத்துக் கொண்டே இருந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் அவருக்கு வந்த இன்னொரு மெசேஜில் உங்களுடைய பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டப் பட்டது. இதனையடுத்து அந்த பெண் தனது சொந்தப் படமான ரூ.13 லட்சத்தை அதில் முதலீடு செய்தார். ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல தொகை வருமானம் வரும் என்று நினைத்துக்கொண்டு அவருக்கு திடீரென இந்த இன்ஸ்டாவில் இருந்து வரும் வருமானம் நிறுத்தப்பட்டது. தொலைபேசி மற்றும் ஈமெயில் கணக்குகளும் செயல்படவில்லை. இதனை அடுத்து அவர் தான் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்து காவல் துறையை அணுகி புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது போன்ற போலியான நபர்களிடம் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்று முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு தகுந்த பொருளாதார வல்லுநரை கலந்து ஆலோசித்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version